செஞ்சியில் சொக்கநாதர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2019 04:01
செஞ்சி:செத்தவரை மோன சித்தர் குருபீட ஆஸ்ரம சொக்கநாதர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.செஞ்சி அடுத்த செத்தவரை--நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள மோன சித்தர் குருபீட ஆஸ்ரம மீனாட்சியம்மன் உடனுரை சொக்கநாதர் கோவிலில் தை மாத பவுர்ணமி பூஜை நடந்தது.
இதை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சொக்கநாதர், மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். காலை 10:30 மணிக்கு சிவ ஜோதி மோன சித்தர் தலைமையில் கலச பிரதிஷ்டையும், சிறப்பு ஹோமமும் நடந்தது. பகல் 12:00 மணிக்கு கலச நீர் கொண்டு சொக்கநாதர் மற்றும் மீனாட்சி யம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு சிவ ஜோதி மோன சித்தர் அருளாசி வழங்கினார்.