திருக்கோவிலூர் அடுத்த ஞானானந்த நிகேதனில் தைப்பூச அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2019 04:01
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த தபோவனம்ஸ்ரீ ஞானானந்த நிகேதனில் தைப்பூசத்தை முன்னிட்டு சத்சங்க மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நித்யானந்தகிரி சுவாமிகள் அன்னதானத்தை துவக்கி வைத்தார். சுவாமிகள் பிரபாவானந்த சரஸ்வதி அம்ருதேஸ் வரானந்த சரஸ்வதி அறக்கட்டளை செயலர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
குருபிரசாத் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கோபாலகிருஷ்ணன் சந்திரசேகர் மற்றும் வேதம் பயிலும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை லதாராகவன் செய்திருந்தார்.