மயிலம்:மயிலம் முருகர் கோவிலில் தை பூச திருவிழா நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை சுப்ரமணியர் சுவாமி கோவில் தைப்பூசவிழா நேற்று (ஜன., 21ல்) நடந்தது. காலை 6:00 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள அக்னி குளக்கரையில் உள்ள
சுந்தரவிநாயகர் கோவிலில் காவடிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் காவடிகளை சுமந்து மலை கோவிலுக்கு வந்தனர்.
காலை 11:00 மணிக்கு நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை சுப்ரமணியர் சுவாமிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 12:30 மணிக்குமூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு உற்சவர்கிரிவல காட்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், மேல் நிலைப்பள்ளி செயலர் விஸ்வநாதன் செய்திருந்தனர்.