Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேடசந்துாரில் ‘நிலாப்பெண்’ ... பாம்பாறு தரைப்பாலத்தை கடந்த கோதண்டராமர் பாம்பாறு தரைப்பாலத்தை கடந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலுக்குள் தெப்பம்: தியாகராஜர் கோவிலில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கோவிலுக்குள் தெப்பம்:  தியாகராஜர் கோவிலில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

23 ஜன
2019
10:01

திருவொற்றியூர்: தியாகராஜர் கோவிலுக்குள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், முதல் முறையாக நடைபெற்ற நிலை தெப்ப உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரவசமடைந்தனர். திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் உள்ளது.

இங்கு, ஆண்டுதோறும் தைப்பூச தினம் அன்று, கோவில் வெளியே உள்ள ஆதிஷேச தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்படும். கடந்தாண்டு, குளத்தில் தேங்கியிருந்த குறைந்தளவு நீரில், நிலை தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு தீர்த்த குளம், தண்ணீரின்றி, கட்டாந்தரையாக காட்சியளித்தது. இதனால், தைப்பூச தெப்ப உற்சவத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. குருக்கள் அறிவுறுத்தல் படி, கோவிலுக்குள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், நிலை தெப்ப உற்சவம் நடத்த, கோவில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையில், கோவிலுக்குள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், நிலை தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது, இதுவே முதன் முறை.
அதன்படி, பிரம்ம தீர்த்த குளத்தில், மேடை அமைக்கப்பட்டு, தெப்பம் வடிவமைக்கப்படடது. நிலை தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, நேற்று  முன் தினம் காலை, தியாகராஜர் அபிஷேகம் நடைபெற்றது. இரவு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் உலா வந்த சந்திரசேகர் உடனுறை வடிவுடையம்மன், நிலை தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு, தீப துாப ஆராதனைகள், உபசாரங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. நிறைவாக, மங்கல வாத்தியங்கள் முழுங்க, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ‘நமச்சிவாய... ஒற்றீஸ்வரா...’ என, முழங்கினர். இரவு, தியாகராஜர் திரு நடனமும், மாடவீதி உற்சவத்துடனும் விழா நிறைவுற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar