வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழாவில், சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 14ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் காலை பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இரவு, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன் தேவியருடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு, வாணவேடிக்கை நடந்தது. விழாவிற்கான, ஏற்பாடுகளை தைப்பூசவிழாக்குழு தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட பலர் செய்திருந்தனர்.