அய்யலுாரில் இருந்து பழநிக்கு முதுகில் தேர் இழுக்கும் பூசாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2019 12:01
வடமதுரை: அய்யலுார் தீத்தாகிழவனுார் பேசும் பழனியாண்டவர் கோயிலில் தைப்பூச விழா கடந்த ஜன.12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அக்கினிசட்டி, பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. தைப்பூசத்தை முன்னிட்டு இக்கோயிலில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்திற்குள் இருக்கும் முருகன் கோயில் ஒன்றுக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே குழுவாக பாதயாத்திரையாக செல்வது வழக்கமாக உள்ளது. தற்போது 54வது ஆண்டாக கோயில் பூசாரி வெங்கடேசன் முதுகில் அலகுகுத்தி பழனிக்கு தேர் இழுத்து செல்ல, பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்கள் ஜன.25ல் பழநியில் சுவாமி தரிசனம் செய்து ஊர் திரும்புவர். இதுதவிர தீத்தாகிழவனுார் சக்திவேல் 9, சவடகவுண்டன்பட்டி வீரமணி 11, உள்பட 7 பக்தர்கள் சிறிய ரக தேர்களை முதுகில் அலகு குத்தி இழுத்தவாறு அய்யலுார் கடைவீதியை வலம் வந்தனர். இருவர் 22 அடி நீள அலகை (வேல் கம்பி) வாயில் குத்தி கடைவீதியை வலம் வந்து நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்.