கிருஷ்ணராயபுரம்: புதுப்பட்டி மாரியம்மன் கோவிலில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், கிருஷ்ணராயபுரம் அடுத்த புதுப்பட்டி மாரியம்மன் கோவிலில், நேற்று (ஜன., 21ல்) மதியம் சிறப்பு பூஜை செய்தனர். இதில் புதுப்பட்டி, வேங்காம்பட்டி, தாளியாம்பட்டி பகுதிவாசிகள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் சார்பில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.