ரிஷிவந்தியம்:சூளாங்குறிச்சியில் உடல் மாரியம்மன் கோவிலில் நேற்று (ஜன., 23ல்) வெண்கல சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் பழமை வாய்ந்த உடல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பக்தர்கள் பொருளுதவியுடன் உடல் மாரியம்மன் வெண்கல சிலை புதிதாக கொண்டு வந்தனர்.ஆகம விதிமுறைப்படி வெண்கல சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நேற்று (ஜன., 23ல்) காலை தொடங்கியது. விக்னேஷ்வர பூஜை, புண்ணியாவஜனம், அங்குரார் பணம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி பூஜைகளுக்கு பின் யாகம் நடத்தினர். தொடர்ந்து உடல் மாரியம்மனுக்கு கண் திறக்கப்பட்டு, கலசாபிஷேகம் செய்தனர்.
முன்னதாக சம்பிரதாய முறைப்படி உடல் மாரியம்மனுக்கு கரிகோல உற்சவம் நடத்தி, பிரதிஷ்டை செய்தனர்.