ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோடு ஷீரடி சாய்பாபா கோயிலில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா நேற்று முன் தினம் துவங்கியது. நேற்று வேலாயுதராஜா வேதாந்த பாடசாலை குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.
இரண்டாம் கால பூஜையுடன், கலசாபிஷேகம், துனி பூஜை மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு சாய் பாபா விசஷே அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அர்ச்சனை செய்த பூக்கள் பக்தர்களால் பாபாவின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்டது. பல்லக்கு உற்சவம், பெண் பக்தர்களின் கோலாட்டமும் நடந்தது. இதை தொடர்ந்து மாலை 6:15 மணிக்கு சென்னை மயிலாப்பூர் சாயிபாபா கோயில் சிவ சுப்பிரமணியன் பாகவதர் குழுவினரின் ஸ்ரீ ஷீரடி சாய் நாமாமிர்தம் பஜன் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து சென்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாய் சேவா சமிதியினர் செய்திருந்தனர்.