பழநி தைப்பூச விழாவில் நேற்றிரவு, பெரியநாயகியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தெப்போற்ஸவம் நடந்தது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசதிருவிழா ஜன.,15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்றிரவு பெரியநாயகிம்மன் கோயில் அருகே தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு யாகபூஜை அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மின்விளக்குகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் குளத்தை மூன்று முறை வலம் வந்தார். இரவு 11:00 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் கொடி இறக்கத்துடன் தைப்பூசவிழா முடிந்தது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்தனர்.