பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
நாமக்கல்: நாமக்கல் நரசிம்மர் கோவிலில், ஜன., 30ல் லட்சார்ச்சனை சிறப்பு பூஜை நடக்கிறது. இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள, நாமக்கல் நரசிம்மர் கோவிலில் உள்ள நாமகிரித்தாயாருக்கு, ஜன., 30 மற்றும் 31ல், காலை, 7:00 மணிக்கு துவங்கி மதியம், 1:00 மணிவரையும், மாலை, 5:00 மணிக்கு துவங்கி, இரவு, 8:00 மணி வரையும் லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது. இதுகுறித்து, கோவில் பட்டாச்சாரியார்கள் கூறியதாவது: இந்த லட்சார்ச்சனை பூஜையில் பங்கேற்றால் கல்வி மேன்மை, திருமண தடை, தொழில் விருத்தி, கடன் தீர்வு, ஆயுள் விருத்தி, செல்வம் பெருகுதல், துன்பம் நீங்குதல், குழந்தை பாக்கியம், நவக்கிரங்கள் நன்மை உள்ளிட்ட நற்பலன் ஏற்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.