பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
திருத்தணி: முருகன் கோவிலில் சேவை அளித்த, வெள்ளி மயில் வாகனம் பழுதடைந்துள்ளதால், வெள்ளித்தேர், தங்கத்தேர் போல், ஆண்டுக்கணக்கில் சீர்செய்யப்படாமல் முடங்கிடுமோ என, பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.
மூலவர், உற்சவரை தரிசித்து செல்கின்றனர். தங்கள் வேண்டுதலுக்காக, தேர் இழுக்கின்றனர்.மலைக்கோவிலில் உள்ள வெள்ளித்தேர், நான்கு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து, அந்த சேவை நிறுத்தப்பட்டது.தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு முன், தங்கத்தேரும் பழுதடைந்து வெள்ளோட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள், வெள்ளி மற்றும் தங்கத்தேர் வெள்ளோட்டத்திற்கு பதில், வெள்ளி மயில் வாகனத்திற்கு பணம் கட்டி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வந்தனர்.வெள்ளோட்டம் நிறுத்தம்வெள்ளி மற்றும் தங்கத்தேரை மட்டும் இழுப்பதாக வேண்டிய சில பக்தர்கள், தங்கள் நேர்த்தி கடனை செலுத்த முடியாமல், இதுவரை காத்திருக்கின்றனர்.இந்நிலையில், ஒரு மாதம் முன், வெள்ளி மயில் வாகனமும் பழுதடைந்து, அந்த சேவையும் நிறுத்தப் பட்டது.எந்த சேவையும், தற்போது இல்லாததால், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆனால், திருத்தணி முருகன் கோவிலில் நடக்கும் தினசரி சேவைகள், பூஜைகள் மற்றும் கோவிலில் உள்ள வசதிகள் குறித்து, கோவில் நிர்வாகம் அளித்த காலண்டரில் வெளியிடப்பட்டுள்ளது.கோவில் தல வரலாறு புத்தகத்திலும், ஆன்லைனிலும், சேவை குறித்த கட்டணங்கள் வெளியிடப் பட்டுள்ளன.முன்பதிவுஅதில், வெள்ளித் தேர், 3,500 ரூபாய், தங்கத்தேர், 2,000 ரூபாய், வெள்ளி மயில் வாகனம் மற்றும் இதர வாகன சேவைக்கு, 3,500 ரூபாய் என, கட்டணம் நிர்ணயித்து உள்ளது.இதை நம்பி வெள்ளி, தங்கத்தேர் மற்றும் வெள்ளி மயில் வாகன சேவைக்கு பக்தர்கள் முன்பதிவு செய்கின்றனர்.ஆனால், பிரார்த்தனை நிறைவேற்ற வரும் போது, வெள்ளி, தங்கத்தேர் மற்றும் வெள்ளி மயில் வாகனம் பழுதடைந்துஉள்ளது என, மலைக்கோவில் ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால், முன்பதிவு செய்யும் பக்தர்கள், அதிருப்தி அடைகின்றனர்.இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெள்ளி மயில் வாகனம் பழுதடைந்துள்ளதால், தற்போது, கிருத்திகை நாளில், கோவில் சார்பில் நடக்கும் சேவைக்கு, ஒருமுறை மட்டும் இயக்கப்படுகிறது.தங்கம், வெள்ளித்தேர் மற்றும் வெள்ளி மயில் வாகனம் சரிசெய்ய, ஹிந்து அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பதில் கிடைத்தவுடன், தேர்கள் சீரமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பிரம்மோற்சவத்திற்கு வருமா?திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில், பிரம்மோற்சவம் நடக்கும். தற்போது, தங்கத்தேர், வெள்ளித்தேர், வெள்ளி மயில் வாகனம் பழுதடைந்துள்ளதால், பக்தர்கள் கவலை அடைந்து உள்ளனர். வரும் பங்குனி மற்றும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவில், வெள்ளிமயில் வாகனமாவது சீரமைத்து, பயன்பாட்டிற்கு வருமா என, எதிர்பார்க்கின்றனர்.