பதிவு செய்த நாள்
27
ஜன
2019
10:01
ஆமதாபாத், குஜராத்தில் உள்ள, புகழ் பெற்ற சோம்நாத் மற்றும் அம்பாஜி கோவில்களைச் சுற்றியுள்ள, 500 மீட்டர் பகுதிகள், சைவ பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன; இங்கு அசைவம் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் புகழ் பெற்ற சோம்நாத் கோவில் உள்ளது. பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது, அம்பாஜி கோவில்.ஹிந்து மதத்தினர் வழிபடும் புகழ்பெற்ற இந்தக் கோவில்களை சுற்றியுள்ள பகுதிகளில், இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர், நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.இந்த நிலையில், பனாஸ்கந்தா மாவட்டம், பலன்புரில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர், விஜய் ரூபானி பேசியதாவது:சோம்நாத் மற்றும் அம்பாஜி கோவில்களை சுற்றியுள்ள, 500 மீட்டர் பகுதிகள், சைவ பகுதியாக அறிவிக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில், இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.