பதிவு செய்த நாள்
28
ஜன
2019
11:01
சேலம்: சேலம், பள்ளப்பட்டியிலுள்ள, அண்ணாமலையார், மாரியம்மன், முனியப்பன் கோவில்களின் கும்பாபிஷேக விழா, கடந்த, 24ல், யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை, தத்திங்கா நாசிதா, மதுரை வீரன் வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், கன்னிமார், பாட்டியம்மன், முனியப்பன், அம்சா அம்மன், கரிகாளி, மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு, திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. நான்காம் கால யாக வேள்வியை தொடர்ந்து, மாரியம்மன், உண்ணாமுலை அம்மன், அண்ணாமலையார் விமானங்களுக்கு, திருக்குட நன்னீராட்டு விழா, மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேத்தை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், எம்.பி., பன்னீர்செல்வம், அண்ணாமலையார் கோவில் அறக்கட்டளை தலைவர் மகிழ்மன்னன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர்கள் ராஜா, சுரேஷ்குமார், அறக்கட்டளை, மாரியம்மன் நற்பணி மன்ற நிர்வாகிகள், ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.