பதிவு செய்த நாள்
28
ஜன
2019
02:01
வால்பாறை:நடுமலை தெற்கு பிரட்டு பூமாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று (ஜன., 27ல்) அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன். இங்குள்ள பூமாரியம்மன், காளியம்மன் திருக்கோவிலின், 59ம் ஆண்டு திருவிழா கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன்
துவங்கியது. பூமாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று (ஜன., 27ல்) அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
தொடர்ந்து நடக்கும் விழாவில், இன்று (ஜன., 28ல்) மாலை, 3:00 மணிக்கு வெள்ளமலை மாரியம்மன் கோவிலிலிருந்து சக்தி கும்பம் எடுத்து வரப்படுகிறது. விழாவில் நாளை (29ம் தேதி) காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு அன்னதானம்
வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.