பதிவு செய்த நாள்
28
ஜன
2019
02:01
கோவை:கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நேற்று, அம்ருதா முரளி இசைக் குழுவினரின் இசைக்கச்சேரி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ஸ்ரீ தியாகப் பிரம்ம கானாஞ்சலி 2019 நிகழ்ச்சியின், 65ம் ஆண்டு உற்சவம் கடந்த, 25ம் தேதி துவங்கியது; நாளை 29ல் நிறைவடைகிறது. நேற்று, (ஜன., 27ல்)மாலை, 6:15 மணிக்கு, அம்ருதா குழுவினரின் இசை கச்சேரி நடந்தது. குழுவில் ஸ்ரீராம்குமார்(வயலின்), வைத்திய நாதன்(மிருதங்கம்), சுரேஷ்(கடம்) வாசித்தனர். இந்நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்டோர்
பங்கேற்றனர்