பதிவு செய்த நாள்
28
ஜன
2019
02:01
ஆனைமலை:ஆனைமலையில் தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலமான மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் குண்டம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
பொள்ளாச்சி - சேத்துமடை ரோட்டோரத்தில், குண்டம் இறங்கும் வளாகம் உள்ளது.இந்த வளாகத்தினுள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் மின் கம்பிகள் செல்கிறது.
மேலும், மூன்று மின் கம்பங்களும் உள்ளன. மின் கம்பிகளால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மின்கம்பிகளை நிலத்தில் புதைத்து கொண்டு செல்ல, புதைமின் வடமாக அமைக்க மின்வாரியத்தினர் திட்டமிட்டனர்.
கடந்த அக்., மாதம் இதற்கான பணியை துவங்கினர். அதன்பின், மழை உள்ளிட்ட காரணங் களால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கோவில் குண்டம் திருவிழா நெருங்கு வதால் தற்போது, புதைமின் வடம் அமைக்கும் பணி ஜரூராக நடக்கிறது.
மின்வாரியத்தினர் கூறுகையில், ஒரு ஹெச்டி மற்றும் எல்டி கம்பிகள் குண்டம் வளாகத் தினுள் செல்கிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக மின் கம்பிகளை, ஆறு அடி ஆழத்துக்கு குழி தோண்டி, நிலத்தினுள் பதித்து கொண்டு செல்லப்படுகிறது. வளாகத்திலுள்ள மூன்று மின் கம்பங்கள் அகற்றப்படுகிறது. இப்பணிகள் இன்னும், ஐந்து நாட்களில் நிறைவடையும், என்றனர்.