பதிவு செய்த நாள்
28
ஜன
2019
02:01
வால்பாறை:வால்பாறை புனித லூக்கா தேவாலயத் தேர்த்திருவிழா கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், தினமும் மாலையில் திருப்பலி, நவநாள்,
லதிஞ்சு ஆகியவை நடந்தன. நேற்று முன் தினம் (ஜன., 26ல்) இரவு, 7:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தேர் பவனி துவங்கி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை
சென்றடைந்தது.
இதில், நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.நேற்று (ஜன., 27ல்) மாலை, 4:30 மணிக்கு அருட்தந்தை தோமஸ்காவுங் கல் தலைமையில் ஆடம்பர திருப்பலி, மறையுரை
மற்றும் தேர் பவனி நடந்தது.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை ஷாஜிபண்டாரபரம்பில் மற்றும் விழா ஒருங்கிணைப் பாளர்கள், ஆலய நிர்வாக பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.