பொள்ளாச்சியில் பைரவர் கோவிலுக்கு சிறப்பு பஸ் இயக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2019 02:01
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்புக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.தேய்பிறை அஷ்டமி, பைரவரை தரிசிப்பதற்கு உகந்த தினமாக கருதப்படுகிறது.
அனைத்து பைரவர் கோவில்களிலும் அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடக்கும். திண்டுக் கல்லை அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள, சொர்ண ஆகர்ஷண பைரவரை தரிசிக்க, தேய்பிறை அஷ்டமியன்று பொள்ளாச்சியில் இருந்து அதிகளவில் பக்தர்கள் செல்வது வழக்கம்.
பக்தர்கள் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. அஷ்டமியான இன்று (ஜன., 28ல்) காலை, 9:30 மணிக்கு, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.