பதிவு செய்த நாள்
29
ஜன
2019
11:01
பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன்கோயில் உண்டியலில் 15 நாட்களில் ரூ. 2 கோடியே 71 லட்சத்து 48ஆயிரம் காணிக்கை கிடைத்து உள்ளது. பழநி முருகன் கோயிலில் கடந்த ஜன.,15 முதல் ஜன.,24வரை தைப்பூசவிழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள், வருகை அதிகரித்தது. இதனால் 15 நாட்களில் நிரம்பிய உண்டியல்கள் திறக்கப்பட்டு, கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது.
இதில் ரொக்கமாக ரூ. 2 கோடியே 71லட்சத்து, 48ஆயிரத்து 680, தங்கம் -627 கிராம், வெள்ளி- 26,190 கிராம், வெளிநாட்டு கரன்சி- 371 காணிக்கையாக கிடைத்துள்ளது. வழக்கமாக ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ. 1 கோடி முதல் 1.5கோடி வரை கிடைக்கும். ஆனால் தைப்பூசவிழாவில் 15நாட்களில் ரூ.2.71 கோடி கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட மூன்றுமடங்கு அதிகம். தொடர்ந்து இன்றும் எண்ணிக்கை நடக்கிறது என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் உதவிஆணையர் சிவலிங்கம், வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.