பதிவு செய்த நாள்
29
ஜன
2019
11:01
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று முன்தினம், அபிஷேகம் நடந்தபோது பூஜை பணிகளில் உதவி செய்த, நாமக்கல், கோட்டை சாலையைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற பட்டாச்சாரியார், கருவறையில் கால்தவறி, எட்டு அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர், சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருவறைக்குள் அசம்பாவிதம் நடந்ததையடுத்து, நேற்று காலை, ஆஞ்சநயர் சன்னதி முழுமையாக தூய்மை செய்யப்பட்டு, கலசங்கள் வைத்து, சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு, புண்யாவாசனம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.