பதிவு செய்த நாள்
29
ஜன
2019
12:01
சூலுார்: காடாம்பாடி கன்னிமார் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.சூலுார் அடுத்த காடாம்பாடி கிராமத்தில் உள்ள விநாயகர், கன்னிமார் மற்றும் கருப்பராய சுவாமி பிரசித்தி பெற்றது. கோ வம்சத்தாரின் குல தெய்வமான இக்கோவிலில், திருப்பணிகள் முடிவுற்று, கடந்த, 26ம் தேதி, விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.மாலை, வாஸ்து சாந்தி முடிந்து, புனித நீர் கலசங்கள், யாக சாலையில் நிறுவப்பட்டு முதல் கால ேஹாமம் நடந்தது. சுவாமிகளின் ஆதார பீடத்தில், எண்வகை மருந்து சாத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை, 5:45 மணிக்கு இரண்டாம் கால ேஹாமம் நடந்தது. பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை நடந்தது.காலை, 8:30 மணிக்கு விநாயகர், கன்னிமார் மற்றும் கருப்பராயசுவாமிக்கு, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள் கோடங்கிபாளையம் வாலைபரமேஸ்வரி சித்தர் பீடம் சிவசாமி சுவாமிகள் மற்றும் சாந்தலிங்க அருள்நெறி மன்றத்தை சேர்ந்த, குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் கும்பாபிஷேகத்தை செய்வித்தனர்.தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர்.