துண்டுக்கருப்பராய சுவாமிக்கு கிடா வெட்டி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2019 12:01
வால்பாறை: துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் திருவிழாவில், நேற்று பொங்கல் பூஜை, நெய்வேத்தியம் மற்றும் உச்சிகால பூஜை நடந்தது.வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் வடக்கு பிரட்டு. இங்குள்ள துண்டுக்கருப்பராய சுவாமி கோவில் திருவிழா, கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன் தினம், அலங்கரிக்கப்பட்ட தேரில் துண்டுக்கருப்பராய சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி நடுமலை தெற்கு டிவிஷனில் இருந்து, கோவிலுக்கு திருவீதியில் உலா வந்தார்.நேற்று காலை, 11:00 மணிக்கு பொங்கல் பூஜை, நெய்வேத்தியம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு சூலுார் மற்றும் கொளப்பலுார் பூசாரிகள் தலைமையில் உச்சிகால பூஜை மற்றும் கிடாவெட்டுதல் நிகழ்ச்சி நடந்து. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில், வால்பாறை நகர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான, ஏற்பாடுகளை கோவில் கமிட்டிகள் செய்திருந்தனர்.