கோயம்பத்தூரில் சங்கராபுரம் ஸ்ரீ மஹாபெரியவா தொடர் சத்சங்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2019 02:01
ஜனவரி 26 மற்றும் 27 ம் தேதியன்று கோவை மாநகரின் முக்கியமான பகுதிகளில் , மாயவரம் தாலுகாவை சார்ந்த கூத்தனூரின் வனதுர்கா கோவிலருகில் உருவாகி கொண்டுவரும் சங்கரா புரம் என்கிற நூதன வேத கிராமத்தை பற்றிய சத்சங்கம் நடைபெற்றது .
சென்னை நங்கநல்லூர் பெரியவா கிரஹத்தில் எழுந்தருளியிருக்கும் காஞ்சி மஹான் ஸ்ரீ மஹா பெரியவா பிரதமையானது தஞ்சை மாவட்டம் திருவையாறு தியாகராஜ ஸ்வாமி களின் ஆராதனை நிகழ்ச்சிகளில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு கோவை நகருக்கு 25 ம் தேதி வெள்ளி இரவு வந்தடைந்தபோது ஏராளமானோர் பூரண கும்ப மரியாதை யுடன் வரவேற்பளித்தனர்.
26 சனியன்று வானப்ரஸ்தா கம்யூனிட்டி ஹால், பிரசன்ன விநாயகர் கோவில் சாய்பாபா காலனி, பார்சன் அபார்ட்மெண்ட்ஸ் நஞ்சுண்டாபுரம் பகுதிகளிலும், 27 ம் தேதியன்று நானா நாணி phase - 2 மற்றும் phase - 4 லும் மிகவும் விமரிசையாக சத்சங்கம் நடை பெற்றது .
ஏராளமான ஸ்ரீ மஹாபெரியவாளின் பக்தர்கள் கலந்துகொண்ட இந்த வெவ்வேறு சத்சங்க நிகழ்ச்சிகளில் ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் ட்ரஸ்ட்டி ஸ்ரீ கி . வெங்கடசுப்ரமணியன் மிக விரிவாக சங்கராபுரம் - ஒரு நூதன வேத கிராமம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
தன்னுடைய அந்த உரையில் சங்கராபுரம் என்கிற வேத கிராமம் மிக பெரியளவில் உருவாகி கொண்டிருக்கும் விதத்தையும், காஞ்சி மாமுனி ஜகத்குரு 68 வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளும் அனைவராலும் பெரியவா என பயபக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு பிரமாண்டமான கோவிலும் , குளங்களும் , கோசாலையும் , 200 மாணவர்கள் படிக்கும்படியான வேத பாடசாலையும் , மேலும் 108 அக்னிஹோத்ரிகளின் கிரஹங்களும் நிர்மாணமாகி கொண்டு வருவத்தைப்பற்றியும் எடுத்துரைத்தார்.
மேலும் சங்கராபுரத்தின் வெவ்வேறு தற்போதய கட்டுமான பணிகளை பற்றியும் இந்த கைங்கர்யத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பினை பற்றியும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.
அனைத்திடத்திலும் ஸ்ரீ மஹா பெரியவாளின் பிரதமைக்கு வேதபாராயணத்துடன் கூடிய பூஜராதனைகள் நடை பெற்றதை பல பக்தர்கள் கண்டு களித்தார்கள்.