வத்தலக்குண்டு: சின்னுபட்டியில் அந்தோணியார் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாளில் கூட்டு திருப்பலியுடன் மின் அலங்கார சப்பர பவனி நடந்தது. மதுரை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் திருப்பலி நடத்தினார். மறுநாள் மஞ்சள் ஆற்றில் நீர் எடுத்துவந்து வீடு தோறும் பொங்கலிட்டு வழிபட்டனர். வாணவேடிக்கையுடன் மின் அலங்கார சப்பர பவனி நடந்தது.