ராமநாதபுரம் லட்சுமிபுரத்தில் தாயுமானவர் சுவாமி குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2019 03:01
ராமநாதபுரம்: ராமநாதபுரம் லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள தாயுமானவர் தபோவனத்தில் குருபூஜை விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு கடந்து இரண்டு நாட்களாக தாயுமானவர் பாடல்கள், பராபரக்கன்னி, திருவாசகம், முற்றோதல் நடந்தது. நேற்று (ஜன., 29ல்) காலை 8:00 மணிக்கு மூலவர் தாயுமான சுவாமிக்கு 11 வகையான அபிஷேகம் ஸ்படிக லிங்கத்தின் வழியாக நடந்தது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மூலவர் அமைந்துள்ள இடத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்ட பஜனை நிகழ்ச்சி நடந்தது. பின் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் சுவாமி சதானந்தர் தலைமையில் ஆன்மிக சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. ஏற்பாடுகளை தபோவன நிர்வாகி பரானந்தர், ஒருங்கிணைப்பாளர் சாரதானந்தர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.