பதிவு செய்த நாள்
30
ஜன
2019
03:01
காஞ்சிபுரம்:வரதராஜ பெருமாள் கோவில் வன போஜன உற்சவத்தை முன்னிட்டு, வரும் திங்கள் கிழமை, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், களக்காட்டூர் கிராமம் செல்கிறார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு, வரும் திங்கள் கிழமை களக்காட்டூர் கிராமத்திற்கு செல்கிறார்.
இதற்காக அன்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு காலை, 9:00 மணிக்கு களக்காட்டூர் சென்றடைவார்.பெருமாள் வருகைக்காக, அக்கிராம மக்கள் தெருக்களில் கோலமிட்டு தரிசனத்திற்காக காத்திருப்பர். பெருமாள் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அன்று மதியம், அக்கிராமத்தில் உள்ள கரிய மாணிக்கப் பெருமாள் கோவிலில் எழுந்தருள்வார். அதை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு பாலாறுக்கு செல்கிறார்; அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.தீபாராதனை முடிந்து, மாலையில் அங்கிருந்து புறப்பட்டு சின்ன அய்யங்குளம் கிராமத்தில், வீதிவுலாக்கு பின், சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீரங்க ராஜவீதி, தேசிகர் கோவிலில் எழுந்தருள்வார்.அங்கு சாற்று முறை முடிந்து, இரவு, 8:00 மணிக்கு கோவிலை சென்றடைவார்.