பதிவு செய்த நாள்
01
பிப்
2019
01:02
திருப்போரூர்: கொளத்தூர் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில், பணியாளர்களுக்குகான ஊதியம் மற்றும் பராமரிப்பை மேம்படுத்த, உண்டியல் வைக்க வேண்டும் என, பக்தர்கள்
கோரியுள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அடுத்த கொளத்தூரில், கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, பெருமாள், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இந்து
அறநிலையத் துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில், ஸ்ரீ சக்கரம், ரங்கநாயகி தாயார் தனி சன்னிதி, ஆண்டாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் உள்ளனர்.காணிக்கையை செலுத்த உண்டியல் இல்லை. உண்டியல் அமைத்தால் கிடைக்கும்
வருவாயில், கோவில் பராமரிப்பு, மற்றும் இங்குள்ள ஊழியர்கள் ஊதியத்திற்கு பயன்படும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.