பதிவு செய்த நாள்
02
பிப்
2019
03:02
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், காந்திக்கு கோவில் கட்ட, மகாத்மா காந்தி சமூக சேவை இயக்கம் சார்பில், வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி அருகில், பூமி பூஜை நடந்தது.
தட்டான்குட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் காந்தி நாச்சிமுத்து தலைமை வகித்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், காந்திக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் லட்சியமாக இருந்தது. சுதந்திர தினத்தன்று, தியாகிகளையும், அவர்களது வாரிசுகளையும் கவுரவப்படுத்தி வருகிறேன்.
அரசு பள்ளி மாணவ, மாணவியரிடையே, தேசப்பற்று ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறேன். கோவிலின் கும்பாபிஷேகம், அவரது பிறந்த நாளான, அக்., 2ல் நடக்கிறது, என்றார்.