Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சாதகமான காலம் வரட்டும் காத்திருப்போம் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ராகுவால் இனி ராஜயோகம் தான்! சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) நல்ல காலம் நெருங்குது சுபயோகமே வாழ்விலே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
16:56

ராகு, கேது பெயர்ச்சியில் கேது நன்மை தரும் 6ம் இடத்திற்கு வந்துள்ளார். நல்லகாலம் நெருங்குவதால் சுபயோகம் உண்டாகும். கேது, சனிபகவானோடு இணைந்து நற்பலன் தருவார். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். ராகு 12ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் பணவிரயம், தூர தேச பயணம் ஏற்படும். குருபகவானால் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.  பொருளாதார வளம் பெருகும்.  தம்பதி ஒற்றுமை சிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. குரு 2020 மார்ச்26 ல் மகர ராசிக்கு மாறுகிறார். இது மிக உயர்வான நிலை.  சனிபகவானால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.  

2019 பிப்ரவரி – அக்டோபர்
கேது சாதகமான இடத்துக்கு வந்திருப்பதன் மூலம் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.  ஆடை, ஆபரணம் வாங்கலாம். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ராகுவால் உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு ஏற்படலாம். வெளியூரில் தங்கும் சூழல் வரலாம்.  மனைவி வகையில் இருந்த கருத்துவேறுபாடு மறையும். உறவினர் வகையில் நெருக்கம் அதிகரிக்கும்.  

பணியாளர்கள்  பணிச்சுமையை சந்தித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். மே 19  முதல் அக்.26 வரை பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. வேலை இன்றி இருப்பவர்கள் சற்று முயற்சித்தால் வேலை கிடைக்கும்.


வியாபாரிகள் வெளியூர் பயணத்தால் அனுகூலம் காண்பர்.  புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும்.


கலைஞர்கள் முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். பணப்புழக்கத்தில் குறை இருக்காது.


அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் சீரான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். குருபகவானின்  வக்ரகாலமான மே 19 முதல் அக்.26க்குள்   புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் பாராட்டு பெறுவர்.


மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.


விவசாயிகளுக்கு  எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.


பெண்கள்  ஆடம்பர பொருட்களை வாங்குவர். புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். சுயதொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும்.


2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்

கேதுவால் காரிய அனுகூலம் உண்டாகும். குருபகவானால் குடும்பத்தில் குழப்பம், பிரச்னை வரலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.  2020 மார்ச் 26க்கு குருவால் தடைபட்ட திருமணம் நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும்.


பணியாளர்கள் வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இருக்காது. சிலர் இடமாற்றத்தை சந்திப்பர்.  பொறுப்புகளை தட்டிக்கழிக்காமல் உடனுக்குடன் செய்யவும். 2020 மார்ச்26க்கு பிறகு பின்தங்கிய நிலை மறையும். அதிர்ஷ்டவசமாக சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.


வியாபாரிகள் தொழில் ரீதியாக வெளியூர் செல்வர். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்காமல் போகாது. சனிபகவான் பலத்தால் சிலர் வியாபாரத்தை விரிவுப்படுத்துவர். 


கலைஞர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள், பொது நல சேவகர்களின் கவுரவத்திற்கு எந்த குறையும் இருக்காது.


மாணவர்கள்  சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே நன்மை கிடைக்கும். 2020 மார்ச் 26க்கு பிறகு சிறப்பான நிலை காணலாம். விவசாயிகள் அதிக விளைச்சல் மூலம் நல்ல வருமானம் காணலாம். வழக்கு, விவகாரங்கள் முடிவுக்கு வரும்.  


பெண்கள் உறவினர்களின் விஷயங்களில்  விட்டுக் கொடுத்து போகவும். வேலையில் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவிஉயர்வுக்கு தடையிருக்காது. குருவின் பார்வையால் மந்தநிலை மாறும். 2020 மார்ச் 26க்கு பிறகு மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்:
* பவுர்ணமியன்று விரதமிருந்து கிரிவலம்
* ராகுகாலத்தில் துர்கைக்கு எலுமிச்சை மாலை
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை) »
temple
ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன் தருவர்.  காரணம் ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார். ... மேலும்
 
temple
ராகு ராசிக்கு 2ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் குடும்பத்தில்  பிரச்னை, தொலைதூர பயணம் ... மேலும்
 
temple
ராகு  உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைவது சுமாரான நிலை தான். இனி முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். ... மேலும்
 
temple
ராகு  ராசிக்கு 11ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை ஏற்பட்ட பிரச்னை இனி ... மேலும்
 
temple
ராகு 10ம் இடமான மிதுனராசிக்கு மாறுவது சிறப்பான இடம் அல்ல. பொருள் இழப்பையும், உடல் உபாதைகளையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.