சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலிலிருந்து, சாமிகள் புறப்பட்டு, தச தீர்த்தங்களில் தீர்த்த வாரிக்கு சென்று சன்னதி வந்தடைந்தது.சிதம்பரம் நடராஜர், சிவகாம சுந்தரியம்மன் கோவில் தை மாதத்தில் சாமிகள் தீர்த்தவாரிக்கு சென்று திரும்புவது வழக்கம் நடராஜர் சன்னதியில் தசதீர்த்தங்களில் முதலாவது தீர்த்தமான சன்னதிக்கு அருகில் கிணற்றில் சாமி நீராடி, சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. நேற்று முன்தினம் (பிப்., 3ல்) இரவு புறப்பட்டு கிள்ளை கடற்கரைக்கு சென்று அதிகாலையில் நீராடி பின்னர் உசுப்பூர் புலிமடுவிற்கு வந்து நீராடியது.
பின்னர், இளையாக்கியனார் குளம், அனந்தீஸ்வரன் கோவில் குளம், நாகசேரிகுளம், தில்லைக்காளி (சிவப்பிரியை குளம்), திருபாற்கடல், சிங்காரத்தோப்பு குளம் ஆகியவற்றில் தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி முடிந்து நடராஜர் சன்னதியை அடைந்தார்.