பதிவு செய்த நாள்
05
பிப்
2019
02:02
திருப்பூர்:தை அமாவாசை தினத்தையொட்டி, திருப்பூர், அவிநாசி சுற்றுப்பகுதிகளில் உள்ள, கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.
அமாவாசை தினமான நேற்று (பிப்., 4ல்), திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், வீரராகவப் பெருமாள் கோவில், கோட்டை ஸ்ரீமாரியம்மன் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், எம்.எஸ்., நகர் நாகாத்தம்மன் கோவில் உட்பட, பல்வேறு கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.அதிகாலையில், மூலவருக்கு அபிஷேகமும், அதனை தொடர்ந்து அலங்கார பூஜையும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.தை அமாவாசை தினமான நேற்று, (பிப்., 4ல்), கோவில்களில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், நல்லாற்றங்கரை மண்டபத்தில், நூற்றுக் கணக்கான பக்தர்கள, தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.