பதிவு செய்த நாள்
05
பிப்
2019
03:02
சேலம்: தை அமாவாசையான நேற்று (பிப்., 4ல்), சேலம் கோவில்கள், நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
முன்னோர்களை வழிபட தை, ஆடி அமாவாசை நாட்கள் மிகவும் உகந்தது. இந்நாட்களில், பொதுமக்கள் நீர் நிலைகளில் தர்ப்பணம், திதி கொடுத்து, கோவில்களில் வழிபாடு மேற் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தை அமாவாசையான நேற்று (பிப்., 4ல்),, சேலம் சுகவனேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், செவ்வாய்ப்பேட்டை அம்பலவாண சுவாமி கோவில்களின் நந்தவனங்கள், அணை மேடு ஆகிய இடங்களில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து, வழிபாடு மேற்கொண்டனர். இதேபோல், உத்தமசோழபுரம் கைலாசநாதர் கோவிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மேலும், காவிரி ஆற்றை ஒட்டிய மேட்டூர், பூலாம்பட்டி, கல்வடங்கம் ஆகிய இடங்களிலும், முன்னோர்களுக்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.