ஒதியத்தூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2019 03:02
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி ஊஞ்சல் ஊற்சவம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று (பிப்., 4ல்) இரவு 7:00 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னதான பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒதியத்தூர், திருமல்ராயபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.