கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் 108 கலசாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2019 03:02
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் 108 கலசாபிஷேகம் நடந்தது.
தை அமாவாசையையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ பெரு மாள் சன்னதி புறப்பாடு செய்து மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். 108 கலசங்களுக்கு ஆவாஹன பூஜை நடந்தது.பெருமாள், தாயார் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், தேன் மற்றும் பழவகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 கலசாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.