காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டத்தில் உள்ளது. நத்தம் பரமேஸ்வர மங்கலம். இங்குள்ள செண்பகேஸ்வரர் கோயில் கருவறை வாயிலின் வலதுபுறம் கெண்டி காஷ்ட சுப்பிரமணிய திருவுருவச்சிலை வித்தியாசமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. கெண்டியையும், ருத்ராட்சத்தையும் தன் கரங்களில் கொண்டு இவர் அருள்பாலிப்பதால் கெண்டி காஷ்ட சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார்.