திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடந்தது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜன.31 ல் பூத்தமலர் பூ அலங்காரம், பிப்.1 ல் பூச்சொரிதல், சாட்டுதல் விழா நடந்தது. நேற்று கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அம்மன் உருவம் பொறித்த கொடியை கோயிலின் நான்கு ரதவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். கொடிக்கு சிறப்பு பூஜை செய்து, கோயில் பூஜாரி கொடி ஏற்றினார். பிப்.8 ல் அம்மன் நாகல் நகர் புறப்பாடு, பிப்.15 ல் பூக்குழி, அம்மன் திருத்தேர் வீதியுலா நடக்கிறது. நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முகமுத்தரசப்பன், அறங்காவலர்கள் பாலசுந்தரம், கோபாலன், பாலகுரு, கணேசன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.