உடுமலை:உடுமலை, நெல்லுக்கடை வீதி சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், லட்சார்ச்சனை பிப்., 10ம்தேதி நடக்கிறது.கோவிலில், தை மாதம் ரத சப்தமி திருநாளையொட்டி, பிப், 10ம்தேதி முதல், 11ம்தேதி வரை, பூமீ நீளா நாயகி சமேத சவுந்திரராஜ பெருமாளுக்கு, லட்சார்ச்சனை நடக்கிறது. உடுமலை சமயபுரம் ஆயிர வைசியர் சங்கம் சார்பில், நெல்லுக்கடை வீதி ராஜராஜேஸ்வரி அம்மன் மண்டபத்தில் மூன்று நாட்கள் இந்த உற்சவம் நடக்கிறது.