மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2019 03:02
புதுச்சத்திரம்:மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் தைமாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் மாதம் தோறும் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம்.
இந்த மாதம் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் (பிப்., 4ல்) நடந்தது. அன்று மாலை 6.00 மணிக்கு பால், தயிர், நெய், குங்குமம், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனை நடந்தது.தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப் பட்டு, தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.