உத்தமபாளயைம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் ராகுகேது தம்பதி சகிதமாக தனித்தலங்களில் எழுந்துள்ள சிறப்பு பெற்றதாகும். காலசர்ப்பதோஷ நிவர்த்தி தலமாகவும், முல்லையாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி இந்த கோயிலின் வாயிலில் ஓடுவதால், காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தென்காளஹஸ்தி என அழைக்கப்படும் இதன் மாசிமகத்தேரோட்டம் பிப். 19 ல் நடக்கிறது.
இதற்கான கொடியேற்றம் இன்று (பிப். 8 )காலை 9:00 மணிமுதல் 10:30 மணிக்குள் நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் பல்வேறு சமூகத்தினர் மண்டகப்படி நடத்துகின்றனர். வெவ்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வருவார். பிப். 18 ல் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. கர்ணம் குடும்பத்தினரும், கோகிலாபுரம் கிராமத்தினரும் இணைந்து இதனை நடத்துகின்றனர். தொடர்ந்து பிப். 19 ல் காலை 11:00 மணிக்குதேரோட்டம் நடக்கிறது.