பதிவு செய்த நாள்
09
பிப்
2019
12:02
தொண்டாமுத்துார்: தொண்டாமுத்துார் மாரியம்மன் கோவிலில் தை மாதம் தீர்த்தக்குட வழிபாடு திருவிழா நேற்று நடந்தது.காலை, 8:00 மணிக்கு, வஞ்சியம்மன் கோவில் வீதியில் உள்ள குள்ளம்மன் கோவிலில், விநாயகர் மற்றும் புனித நீர் வழிபாடு நடந்தது. 8:30 மணிக்கு, குள்ளம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடங்கள் புறப்பட்டன.சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் தீர்த்தக்குடங்களுடன், மங்கள வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக வந்தனர். 11:30 மணிக்கு, தீர்த்தக்குடங்கள் மாரியம்மன் கோவிலை வந்தடைந்து, மாரியம்மனுக்கு தீர்த்தக்குடங்களால், பெருந்திருமஞ்சனம் நடந்தது.பகல்,12:00 மணிக்கு, சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அம்மன் எழுந்தருளுவிக்கப்பட்டு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொண்டாமுத்துார் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.