பதிவு செய்த நாள்
09
பிப்
2019
12:02
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 55 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வர். பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்படும். அதன்படி, நேற்று, உதவி ஆணையர்கள் ரமஷே், தமிழரசு, தக்கார் வெங்கடஷே், ஆய்வாளர் அம்சா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, அதிலிருந்த பணம் பக்தர்கள் மற்றும் வங்கியாளர்கள் மூலம் எண்ணப்பட்டது. அதில், 55 லட்சத்து, 960 ரூபாய், 25 கிராம் தங்கம், 102 கிராம் வெள்ளி இருந்ததாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.