பதிவு செய்த நாள்
09
பிப்
2019
03:02
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, பெருமாகவுண்டம்பட்டியில், ஸ்ரீதுரை முனியப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று பிப்., 8ம் தேதி காலை, 6:00 மணிக்கு, கணபதி வழிபாடு நடந்தது. தொடர்ந்து, கஞ்சமலை சித்தர்கோவிலில், சிறப்பு பூஜை செய்து, திரளான பக்தர்கள், தீர்த்தக்குடங்களை சுமந்து, ஊர்வலமாக சென்று, முனியப்பன் கோவிலை அடைந்தனர். இன்று பிப்., 9ம் தேதி காலை, 8:00 மணிக்கு, வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி; நாளை பிப்., 10ம் காலை, 9:30 முதல், 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
* பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, சென்றாய பெருமாள், சோமேஸ்வரர் கோவில்களின் ஆலயத்திருப்பணி முடிந்து, கும்பாபிஷேகம், நாளை நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு, கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்ற, திரளான பக்தர்கள், பூலாம்பட்டி காவிரியாற்றிலிருந்து, தீர்த்தக்குடங்களை எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.