பதிவு செய்த நாள்
11
பிப்
2019
04:02
திருத்தணி:திருத்தணி அடுத்த, அருங்குளம் கூட்டுச்சாலையில், சத்யசாட்சி கந்தன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மூன்றாம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நேற்று (பிப்., 10ல்) நடந்தது.
இதையொட்டி, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 18 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம் மற்றும் நான்குகால யாகசாலை பூஜைகள் நடந்தன.நேற்று (பிப்., 10ல்) காலை, 9:00 மணிக்கு, கோவில் விமானம், கருமாரி அம்மன், நவகிரகம், விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய சன்னிதிகளில், புனிதநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து புனித நீரை, அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.விழாவில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வழிபட்டனர்.