* மனதில் இருந்து அகந்தையை அகற்று. இதயத்தில் இரக்கம் சுரக்கட்டும். உண்மைக்கும் நேர்மைக்கும் தலை வணங்கு. * நீ பெற்ற இன்பத்தை உலகமே பெற வேண்டும் என்ற பரந்த நோக்கம் கொள். கண்டு வணங்கிய திவ்யதேசங்கள் குறித்து மற்றவருக்கு எடுத்துச் சொல். * ஊருக்கு நல்லது செய்யும் விதத்தில் வாழ்ந்தால் கடவுளுக்கு சேவை செய்யும் பாக்கியசாலியாக இருக்கலாம். * கடவுளுக்கு செய்யும் தொண்டு, குருவுக்கு செய்யும் சேவை, பக்தர்களுக்கு செய்யும் பணி மூன்றும் புனிதமானது. * முன்னோர் நமக்காக எழுதி வைத்த நூல்களிலுள்ள கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள். சாதாரண நூல்கள் சொல்வதை ஏற்க தேவையில்லை. * வயிறு வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துபவருடன் நட்பு பாராட்டாதே. பிறர் மீது குற்றம் சொல்பவருடன் பேசாதே. * கடவுளுக்கு படைத்த உணவு, நீர், சந்தனம், மலர், தாம்பூலம் ஆகியவற்றை பிரசாதமாகக் கருதி ஏற்றுக்கொள். * ஏதேனும் நன்மை கருதி கடமையாற்றாதே. பெருமாளின் திருவுள்ளம் மகிழ்ச்சியடையும் விதத்தில் பொதுப்பணியில் ஈடுபடு. - சொல்கிறார் ராமானுஜர்