* தேங்காய் உடைத்ததும் வெண்மையான பருப்பு தெரியும். அதுபோல மனதை சுத்தமாக வைத்துக் கொள் என்பதே கடவுளுக்கு தேங்காய் உடைப்பதன் தத்துவம். * மற்றவர் தயவில் கிடைக்கும் பால் சோற்றை விட சுயஉழைப்பில் கிடைக்கும் தண்ணீரும், சோறும் உயர்வானது. * இரவுக்கு தேவையானதை பகலில் தேடுவது போல, முதுமைக்கு தேவையானதை இளமையில் தேட வேண்டும். * உண்மை பேசுதல். தர்மவழியில் வாழ்தல். பெற்றோரை மதித்தல் இவையே நல்லவர் இயல்பு. * கடவுள் செய்வது அத்தனையும் அருள் தான். சில நேரத்தில் சோதனை போல துன்பம் தருவதாக தோன்றலாம். அதுவும் கூட அறியாமையே. * மற்றவன் குணம் எப்படி இருக்கிறது என்பதை விட உன் குணம் எப்படி இருக்கிறது என எண்ணிப்பார். அதுவே மேலான பண்பு. ஒரு விதை பல நூறாக பெருகுவது போல பாவமும், புண்ணியமும் ஒன்றுக்கு பலவாக திரும்ப வரும். அதனால் யோசித்து செயல்படு. * உருவத்தில் மனிதனாகவும், உள்ளத்தில் மிருகமாகவும் இருக்காதே. மனித தன்மையில் இருந்து தெய்வத் தன்மைக்கு உயர்ந்திட முயற்சி செய். - விளக்குகிறார் வாரியார்