மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2019 01:02
புதுச்சேரி: மொரட்டாண்டி சனிஸ்வர பகவான் கோவிலில் நேற்று நடந்த ராகு கேது பெயர்ச்சி விழாவை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மொரட்டாண்டி விஸ்வரூப மகா சனிஸ்வர பகவான் கோவிலில், நேற்று மதியம் 2:00 மணி 4 நிமிடத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்ந்தார். இந்த பெயர்ச்சி விழாவையொட்டி, சனிஸ்வர பகவான் கோவிலில் உள்ள, 12 அடி உயர ராகு பகவானுக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும், 12 அடி உயர கேது பகவானுக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம், 108 கிலோ கொள்ளு, சுண்டல் நைவேத்தியம் செய்யப்பட்டது. முன்னதாககாலை 8:00 மணிக்கு நட்சத்திர ராசி பரிகார ஹோமங்களும், காலை 10:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, மதியம் 12:37 மணிக்கு அபிஷேகமும், பின்பு ராகு கேது பகவானுக்கு பஞ்சலோக ஆபரண கவசம் அணிவித்து, தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வைதீக சாம்ராட் கீதாராம் குருக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தினர்.