ஸ்ரீவில்லிபுத்தூர் சிவன் கோயிலில் ராகு,கேது பெயர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2019 01:02
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் ராகு,கேது பெயர்ச்சி சிறப்புடன் நடந்தது.இதை முன்னிட்டு நேற்று (பிப்., 13ல்) காலை 11:00 மணிமுதல் ராகு, கேதுவிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, பகல் 2:02 மணிக்கு சிறப்பு பூஜைகளை ரகு மற்றும் ரமேஷ் பட்டர் நடத்தினார்கள். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கோயில் செயல்அலுவலர் சுந்தர்ராஜ் மற்றும் கோயில் பட்டர்கள், பக்தர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.இது போல் மாவட்டத்தில் உள்ள சிவன் மற்றும் முக்கிய கோயில்களில் ராகு,கேது பெயர்ச்சி பூஜைகள் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.