வால்பாறை பழநி பாத யாத்திரை குழு முருகருக்கு பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2019 02:02
வால்பாறை:பழநி பாத யாத்திரைக்குழு சார்பில் முருகனுக்கு பாலாபிஷேக பூஜை நடந்தது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் முருக பக்தர்கள் காவடிக் குழு சார்பில், பழநி பாத யாத்திரை குழுவின், 43ம் ஆண்டு திருவிழா நேற்று (பிப்., 15ல்) துவங்கியது.
விழாவையொட்டி காலை, 10:00 மணிக்கு நடுமலை ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன் பின் முருகனுக்கு பாலாபிஷேக பூஜையும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது.அன்னதான விழாவை வால்பாறை கூட்டுறவு நகர வங்கி துணைத்தலைவர் மயில்கணேஷ், முன்னாள் நகராட்சித் தலைவர் கணேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.விழாவில், நாளை (17 ம் தேதி) மாலை, 3:30 மணிக்கு முருகபக்தர்கள் பழநிக்கு பாத யாத்திரையாக செல்கின்றனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை பாத யாத்திரை காவடிக்குழு தலைவர் மருதையன், செயலாளர் கண்ணன், பொருளாளர் அழகுராஜ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.