பதிவு செய்த நாள்
16
பிப்
2019
02:02
வால்பாறை:வால்பாறையில், மகா முனீஸ்வரர் சுவாமி கோவிலின், 19ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை கக்கன் காலனி கண்திறந்து பார்த்த மகா முனீஸ்வரன் கோவிலின், 19ம் ஆண்டு திருவிழா கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில், நேற்று முன் தினம் (பிப்., 14ல்)மாலை காமராஜ்நகர் சக்திமாரியம்மன் கோவிலில் இருந்து, புனித தீர்த்தம் மற்றும் சக்திகும்பம் எடுத்துவரப் பட்டது. நேற்று (பிப்., 15ல்) காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. காலை, 11:30 மணிக்கு கெடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும், 23ம் தேதி வரை நடக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.